Thursday, May, 24, 2012இலங்கை::சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளவுள்ள உணவுத் தவிர்ப்பி போராட்டத்தில், தாமும் கலந்துக் கொள்ளவிருப்பதாக மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
முன்னணியின் ஊடக செயலாளர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்பிரேமசந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனிடம் இதற்கான அழைப்பை விடுத்துள்ளனர்.
இந்த அழைப்பை ஏற்று நாளை நடைபெறவுள்ள உணவுத் தவிர்ப்பில் பங்கேற்கவிருப்பதாக ஜனநாய மக்கள் முன்னணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை மேற்கொள்ளவுள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்பில் எந்த மாற்று தீர்மானத்துக்கும் வரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் நேற்று ; விசேட அறிவித்தல் ஒன்றை விடுக்கவிருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு அரசியல் கைதிகளுக்கு சாதகமானதாக அமையாத பட்சத்தில், இந்த உணவுத்தவிர்ப்பு போராட்ட தீர்மானம் கைவிடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று அமைச்சர் சந்திரசிறி கஜதீரை அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு, உணவுத் தவிர்ப்பை கைவிடுமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த கோரிக்கையை நிரகரித்த அரசியல் கைதிகள், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வு அறிவிப்பு இன்று வெளியாகும் வரையில் எதிர்பார்த்திருப்பதாக, கைதிகள் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment