Tuesday, May, 22, 2012இலங்கை::சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி தனக்கு பாதுகாப்பு தேவையொன்றால், பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்க முடியும் என காவற்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொன்சேக்கா விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து நேற்று வரை எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், சரத் பொன்சேக்கா, பாதுகாப்பு அமைச்சிடம் விடுக்கும் கோரிக்கையின் அடிப்படையில், அவருக்கு காவற்துறை அல்லது இராணுவ பாதுகாப்பு வழங்குவது பற்றி தீர்மானிக்கப்படும் எனவும் காவற்துறைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment