Tuesday, May, 22, 2012இலங்கை::நாட்டின் கலை கலாசார பண்பாடு விழுமியங்களையும் வரலாற்றுத் தொன்மைகளையும் பிரதிபலிக்கின்ற வகையில் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் தேசிய வடிவமைப்பு நிலையத்தினது முதலாம் காலாண்டுக்குரிய மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தால் முதலாம் காலாண்டில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மகிந்த சிந்தனைக்கமைவாக வாழ்வெழுச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தினது பங்கு பணிகள் குறித்தும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
நாட்டின் கலை கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களையும் பிரதிபலிக்கின்ற வகையிலும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள சரித்திர முக்கியத்துவங்களையும் பிரதிபலிக்கின்ற வகையிலும் வாய்ந்ததுமான வகையிலும் கலைப்படைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டின் கலை கலாசாரம் மற்றும் தொன்மையான வரலாறுகளையும் பாதுகாக்க முடியும். இதன் மூலமே இவ்வாறான கலைப்படைப்புகள் உல்லாசப் பயணிகளைக் கவரும் என்பதுடன் உல்லாசப் பயணத்துறையூடாக பொருளாதாரத்தையும் மேம்படுத்தவும் முடியும்.
இதன் மூலம் கலைப்படைப்பாளிகளினது வாழ்வாதாரமும் மேம்பாடடையும் என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலங்களில் தேசிய வடிவமைப்பு நிலையத்தினது செயற்பாடுகள் நவீனப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சின் இணைப்பாளர் செல்வி தங்கேஸ்வரி அமைச்சரின் ஆலோசகர் திருமதி வி.ஜெகராஜசிங்கம் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் தலைவர் மார்சல் ஜனதா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment