Sunday, May, 20, 2012இலங்கை::வடபகுதி மக்களின் யுத்தத்தால் அழிவடைந்த ஆவணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு தெரிவிக்கின்றது.
இதனடிப்படையில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கான விசேட அலுவலகமொன்றை எதிர்வரும் வாரத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவிக்கிறது.
செட்டிக்குளம் மற்றும் கதிர்காமர் நகர் ஆகிய பகுதிகளில் இந்த அலுவலகத்தை திறப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பதிவாளர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு கணிணி கட்டமைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொடுக்கும் வகையிலான 38 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் பேர் நன்மையடைவதாக தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
No comments:
Post a Comment