Sunday, May 20, 2012

இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை -இரா.சம்பந்தன்!

Sunday, May, 20, 2012
இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐ.தே.கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்குமிடையிலான பேச்சுவார்த்தை விவரங்களை ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் விபரித்தார். பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதன் அவசியம் குறித்தும் அவர் எம்மிடம் விபரித்தார்.

நாம் எமது நிலைப்பாட்டைத் தெளிவாக அவரிடம் விவரித்ததுடன் ஜனாதிபதி கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட வேண்டிய இணக்கப்பாடு குறித்தும் ஐ.தே.கட்சியிடம் எடுத்துரைத்தோம் என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment