Sunday, May, 20, 2012இலங்கை::கண்டி குளுகம்மான பிரதேசத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ வீரர் இன்று உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை குறித்த இராணுவ வீரர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது குறித்த பெண்ணின் கணவரும் காயமடைந்துள்ளார்.
பின்னர் சந்தேகநபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment