Sunday, May 27, 2012

மாற்றுக் கருத்துடையோர் அரசின் உளவாளிகள்,துரோகிகள் என வர்ணிப்பு: புலிகளின் அழிவின் பின்னரும் திருந்தாத ஜென்மங்களாக தீவிரவாத தமிழர்கள்!

Sunday, ,May, 27, 2012
இலங்கை::புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும் பாலானோர் அகதிகள் அல்லரென்றும் அவர்கள் பொருளாதார அகதிகளே என்றும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் அருண் தம்பி முத்து சுட்டிக்காட்டினார். லண்டனில் புரொண்ட் லைன் கிளப் நடத்திய இலங்கை தொடர்பான கலந்துரையாடலில் தாம் இந்த உண்மையை தெளிவுபடுத்தியபோது தீவிரவாத தமிழ் இணையத்தளங்கள் தன்னை விமர்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த உண்மையை ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளத்தால் ஏற்றுக்கொண்ட போதும் உதட்டளவில் சொல்ல மறுக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் 15, 20 இலட்சங்களை ஏஜென்ஸிகளுக்கு தாரை வார்த்து அந்நாடுகளுக்கு சென் றுள்ள இந்த தமிழர்கள் உண்மையில் அகதிகளா? என அவர் கேள்வி யெழுப்பினார்.

மாற்றுக் கருத்துக்கொண்டவர்களை அரசின் உளவாளிகள் என்றும் துரோகிகள் என்றும் முத்திரை குத்துவது தீவிரவாதத் தமிழர்களின் வரலாறாகிவிட்டது. புலிகளின் அழிவின் பின்னரும் அந்த நிலை இன்னும் தொடர்வது வேதனையானது.

லண்டன் கருத்தரங்கில் இலங்கையில் வாழும் அப்பாவித் தமிழர்களின் உண்மையான நிலையை தெளிவுபடுத்தியிருந் தேன். நானும் புலிகளால் பாதிக்கப்பட்டவன். 13 வயதில் எனது தாயும் தந்தையும் புலிகளால் காவு கொள்ளப்பட்டவர்கள். நான் அநாதையாக்கப்பட்டேன். என் தாங்கொணா வேதனையை அந்தக் கருத்தரங்கில் கொட்டினேன்.

அதனைத் திரிபுபடுத்தி எனது தாய், தந்தையரை அடகு வைத்து வியாபாரம் செய்வதாக இணையத்தளங்களில் கதையளந்துள்ளனர்.

புலிகளின் விடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பு மக்கள் கொடுத்த விலை அதிகம் என நான் கூறிய கூற்றுக்கு மாற்றமாக உண்மைக்கு புறம்பான வகையில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் பிறந்த நான் அந்தப் பிரதேசத்தின் மண்வாசனை, மக்களின் துன்பங்கள் தொடர்பாக கருத்தரங்கில் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பிரதேசவாத சாயம் பூசி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. புலிகள் இயக்கம் இலங்கைத் தமிழர்களிடமிருந்து ‘வரி’ என்ற போர்வையில் கறந்த பணம் மற்றும் அப்பாவித் தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த நகைகள் போன்றவற்றின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டிருக்கும் முதலீடுகள் இன்று புலி பினாமிகளால் அனுபவிக்கப்படுகின்றன. இரத்தமும் வியர்வையும் கலந்த அப்பாவித் தமிழர்களின் உழைப்பில் அங்கு சொகுசு வாழ்க்கை வாழும் அவர்கள் அகதி முகாம்களிலும் வீடுகளிலும் வாழும் மக்களை பற்றி சிந்தித்ததுண்டா எனவும் வினா எழுப்பியி ருந்தேன். இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி பொலண்டா போஸ்டர், சனல் 4 தயாரிப் பாளர் காலம் மக்ரே மற்றும் பி. பி. சி. ஹாட்டோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்டீபன் சக்கோர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைக்கான தமிழர் (Tamils for Srilanka) என்ற அமைப்பின் பிரதிநிதியாகவே நான் இலண்டன் கருத்தரங்கில் கலந்துகொண்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment