Tuesday, May 22, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விண்ணப்பம் நிராகரிப்பு!

Tuesday, May, 22, 2012
இலங்கை::பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ளும்படி விடுக்கப்பட்ட விண்ணப்பத்த தேர்தல் செயலகம் நிராகரித்துள்ளதோடு, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

ஒரு கட்சி பதிவதற்கு வேண்டிய ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய முறையில் சமர்ப்பிக்க வில்லையென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்...

த.தே.கூ விசேட அறிவிப்பு!

நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனால் இந்த அறிவிப்பு முன்வைக்கப்படவிருப்பதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் போது நாடாளுமன்றத் தெரிவிக்குழுவில் இணைவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்வைக்கும் நிபந்தனைகள் குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் உறுப்பினர்களின் விசேட சந்திப்பு ஒன்று இ தினம் நடைபெறவுள்ளது.

இதன்போது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment