Tuesday, May 22, 2012

அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் புலிகளின் போர் குற்றவாளிகளுக்கு தஞ்சம் வழங்கியுள்ளது-இலங்கை!

Tuesday, May, 22, 2012
இலங்கை::அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளில் புலிகளின் போர் குற்றவாளிகள் 20 பேருக்கு தஞ்சம் வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் தெரிவித்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. பதுங்கு குழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட புலிகளின் சர்வதேச தலைவரான காஸ்த்ரோவின் ஆவணங்கள் மூலம், இந்த 20 பேர் இருக்கும் நாடுகள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.

இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்டுள்ள ஹிலாரி கிளின்டன், போர் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புலிகளின் பிரதான போர் குற்றவாளி, பிரபாகரனின் போர் குற்றங்களுக்கு உதவிய விதம் குறித்து காஸ்த்ரோவின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகளின் 5 போர் குற்றவாளிகள் பிரித்தானியாவிலும், 4 பேர் பிரான்ஸிலும், இரண்டு பேர் நோர்வேயிலும், 3 பேர் ஜெர்மனியிலும், சுவிடன், டென்மார்க் நாடுகளில் 4 பேரும், கனடாவில் ஒருவரும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கண்டறிந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment