Thursday, May 24, 2012

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, சிறந்த அவர் மீது ஜனாதிபதிக்கு விரோதம் இல்லை: அரசாங்கம்!

Thursday, May, 24, 2012
இலங்கை::முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, சிறந்த போர் வீரராவார். அவரது திறமையைக் கருத்திற் கொண்டும், அவரது இராணுவ சேவைக்கு மதிப்பளிக்கும் வகையிலுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கினார் என்று அரசாங்கம் இன்று அறிவித்தது.

'யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சரத் பொன்சேகாவின் தலைமைத்துவம் சிறந்து விளங்கியது. அவர் என்ன பிழைகள் செய்தாலும் அவர் நாட்டுக்காக அவர் ஆற்றிய சேவை அளப்பறியது.

அதனாலேயே யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டில் அவர் விடுதலை பெற வேண்டும் என்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்' என்று அமைச்சரவையின் பதில் பேச்சாளரும் பிரதியமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதன்போது சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கக் காரணம் யாது? என ஊடகவியலாளர்கள் சிலர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments:

Post a Comment