Wednesday,May, 16, 2012இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த முற்பட்ட புலிச் சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியல்:-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த முற்பட்ட புலிச் சந்தேகநபரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.2006ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த முற்பட்டதாக சண்முகம் சூரியகுமார் என்பவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறித்த புலிசந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கனிஷ்க விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேகநபர், தொடர்பில் பல தடவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு இராணுவத் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன், 11 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment