Wednesday, May 16, 2012

மாரவில நீதவான் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

Wednesday,May, 16, 2012
இலங்கை::மாரவில நீதவான் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாரவில ரங்சிகம பகுதியில் உள்ள நீதவான் வீட்டின் மீது இன்று இரவு 08.35 அளவில் இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியதாக வீட்டின் பொலிஸ் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment