Wednesday, May 16, 2012

மட்டு.மாவட்டத்தின் முதல் பெண் அரசாங்க அதிபர் இன்று பதவியேற்பு!

Wednesday,May, 16, 2012
இலங்கை::மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் முதல் பெண் அரசாங்க அதிபராக வவுனியா அரசாங்க அதிபராக நீண்டகாலம் பணியாற்றிய திருமதி பி.எஜ்.எம்.சாள்ஸ் இன்று மதியம் 11.05 மணிக்’கு கடமையேற்றார்.

இன்று காலை மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற சமயவழிபாடுகளையடுத்து இந்து, முஸ்லிம், பௌத்த, கத்தோலிக்க சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் கடமையை பொறுப்பேற்றார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்ற செயலக அதிகாரிகளுடனான உயர்மட்ட கூட்டத்திலும் பங்கேற்றார்.

முன்னர் இம்மாவட்ட அரசாங்க அதிபராக கடமைபுரிந்த சுந்தரம் அருமைநாயகம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment