Saturday, May 19, 2012

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக எட்டப்படும் தீர்வு, சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவேண்டும்-வசந்த பண்டார!

Saturday, May, 19, 2012
இலங்கை::நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக எட்டப்படும் தீர்வு, சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஓரிரு நாள்களுக்குள் தெரிவுக்குழுவுக்கு வந்தே தீரும் என தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலும்

நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்று ஏற்கமுடியாத தீர்வுகளும் வரும் என எண்ணுவதாக கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எவ்வாறானதொரு தீர்வு எட்டப்பட்டாலும் அதனை அரசு சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும். எமது கோரிக்கையை அரசு தட்டிக்கழிக்க முடியாது.

அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பணிந்து செல்லக்கூடாது. அதை இறுக்கிப் பிடிக்க வேண்டும். இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் தெரிவுக்குழுவுக்கு வரும் என்பதை எம்மால் உறுதியாகக் கூறமுடியும் எனவும் வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment