






Saturday, May, 19, 2012இலங்கை::அச்சுறுத்தல்கள் குறையும் வரையில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை அவசரமாக அகற்றிக் கொள்வது ஆரோக்கியமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு சாரார் தொடர்ந்தும் ஈழம் பற்றிய கோரிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் இயங்கி வந்த சகல இயக்கங்களினதும் ஆயுதங்கள் முற்று முழுதாக களையப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்...
21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு தரை, வான், கடல் சாகசங்களுடன் கொழும்பில் யுத்த வெற்றிக் கொண்டாட்டம்!
யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு கொழும்பு, காலி முகத்திடலில் ஆரம்பமாகியது.
இதன்போது முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது. அத்துடன், வெற்றிக்கான 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அணிவகுப்பில் முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 854 அதிகாரிகள் உட்பட 12 ஆயிரத்து 828பேர் பங்குபற்றினர்.இவர்கள், கிழக்கு, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என மூன்று முன்னணிகளாக அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன், யுத்தத்தின்போது காயமடைந்த படைவீரர்களில் 200பேர் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.இராணுவத்தின் யுத்த வாகனங்கள், பல்குழல் பீரங்கிகள், பொறியியல், சமிக்ஞை பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 148 வாகனங்களும் இந்த அணிவகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
அத்துடன், கடற்படையைச் சேர்ந்த 72 படகுகள், விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்கள் உள்ளடங்களான 32 விமானங்கள் அணிவகுப்பின் போது சாகசங்களைக் காண்பிக்கவுள்ள அதேவேளை, கமாண்டோ படையணியின் 22 பரசூட்களும் விசேட படையணியின் மோட்டார் சைக்கிள் சாகசங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது...
புலிகளுடனான யுத்தத்தின் போது உயிரிழந்த முப்படையினரில் 15பேர் 'பரம வீர விபூஷண' விருது வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகள், கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்று வருகின்றது.
இதன்போது மேற்படி படையினரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதியிடமிருந்து குறித்த விருதுகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது...
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எவருக்கும் பயந்து நாம் நடைமுறைப்படுத்தவுமில்லை தட்டிக் கழிக்கவுமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். யுத்த வெற்ற தின மூன்றாவது ஆண்டு நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி ஐக்கியத்தை பேணும் ஒரு முயற்சியாகவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நாம் நியமித்தோம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் சிலவற்றை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அவற்றை நடைமுறைப்படுத்துவற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அப்பரிந்துரைகளை தட்டிக்கழிக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment