Thursday, May, 24, 2012இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் பொன்சேகாவுக்கு அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பை வழங்க சம்மதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்க மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியின் மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். பொன்சேகாவின் குடும்ப உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸும் இவ்விடயத்தினை அரச மட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். இவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் பொன்சேகாவுக்கு அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பினை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment