Thursday, May 24, 2012

சென்ட்ரல், ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் அரசு ஊழியரிடம் தீவிர விசாரணை!

Thursday, May, 24, 2012
சென்னை::சென்னை சென்ட்ரல், ஐகோர்ட்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று ரயில்வே அதிகாரிக்கு மிரட்டல் கடிதம் எழுதிய மர்ம ஆசாமி யார் என்பது குறித்து துப்பு கிடைத்துள்ளது. அவரை விரைவில் கைது செய்வோம் என்று ரயில்வே போலீசார் தெரிவித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமிக்கு நேற்று மாலை 4 மணிக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது. அந்த கடிதத்தில் சில எச்சரிக்கைகளை விடுத்து, அதை செய்யாவிட்டால் சென்னை சென்ட்ரல், ஐகோர்ட், குறளகம், இந்தியன் வங்கி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகளை வெடிக்க செய்வேன். 2 நாட்களில் குண்டு வெடிக்கும் என்று தமிழில் டைப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு கோவிந்தசாமி தகவல் தெரிவித்தார். அவர்கள் உத்தரவின்படி சென்ட்ரல் துணை கோட்ட கண்காணிப்பாளர் பொன்ராமுவிடம் கடிதத்தை ஒப்படைத்தார். மேலும், சென்ட்ரலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர், நீதிமோகன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சஞ்ஜய், அஜித்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பயணிகள், அவர்களது உடமைகள் பரிசோதிக்கப்பட்டன. வெடிகுண்டு அகற்றும் நிபுணர் படையுடன், மோப்ப நாய்களும் சோதனையில் ஈடுபட்டன. இதற்கிடையில், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வட சென்னை முகவரியில் நேற்றிரவு விசாரித்த போது அது உண்மையான முகவரி என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த ராஜு என்ற பெயரில் உள்ளவர் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரிய வந்தது. ராஜுவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் இன்று காலை கூறுகையில், மிரட்டல் கடிதம் அனுப்பியவர் பற்றி போதுமான துப்பு கிடைத்துள்ளது. விரைவில் ஆசாமியை கைது செய்துவிடுவோம் என்றனர்.

No comments:

Post a Comment