Wednesday, May 16, 2012

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவிலுள்ள லகூன் காடுகளில் விடுதலைப் புலிகள்?,

Wednesday,May, 16, 2012
திருத்துறைப்பூண்டி::திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவிலுள்ள லகூன் காடுகளில் விடுதலைப் புலிகள்:-

திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவிலுள்ள, முத்துப்பேட்டை லகூன் பகுதியில், சதுப்பு நில காடுகள், அதிகம் நிறைந்துள்ளன. இப்பகுதியில், நேற்று முன்தினம் இரவில், நீல நிற பைபர் படகு, நடமாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலோர காவல் படையினர் இன்ஸ்பெக்டர் சின்னையன், எஸ்.ஐ., சுப்பிரமணியன் ஆகியோர், படகை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். மேலும், பைபர் படகிலிருந்து இறங்கி, தமிழகத்தில் புலிகள் ஊடுருவினரா அல்லது வெளி மாநில பயங்கரவாதிகள் ஊடுருவினரா என, போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment