Wednesday, May 23, 2012

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்திய பாக்., படை!

Wednesday,May, 23, 2012
ஜம்மு:;ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், இந்தியா-பாக்., எல்லைப்பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய ராணுவத்தினரின் முகாம்களை நோக்கி, நேற்று அதிகாலை, பாக்., படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் உடன் பதில் தாக்குதல் நடத்தினர். இருந்தாலும், இந்த சண்டையால், எந்த விதமான பொருள் சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை. இந்த ஆண்டில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்துவது இது, 10வது முறையாகும். இந்த மாதத்தில் மட்டும், மூன்றாவது முறையாக போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். 2010ம் ஆண்டு முதல், இதுவரை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., படையினர் 105 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஊடுருவல் முறியடிப்பு: காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே, காம்பீர்-தர்குண்டி பகுதியில், நேற்று முன்தினம் இரவு, பயங்கரவாதிகள் மூன்று பேரின் நடமாட்டம் இருப்பது, கண்காணிப்பு கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் தெரியவந்தது. உடன், பயங்கரவாதிகளை தடுத்த நிறுத்த ராணுவத்தினர் முற்பட்டனர். உடன், ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் சுட்டனர். ராணுவத்தினரும் பதிலடி கொடுத்ததில், 20 நிமிடங்களுக்கு மேலாக சண்டை நீடித்தது. இதையடுத்து, பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதன்பின், காலையில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், பயங்கரவாதி ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப் பட்டது. இதே பூஞ்ச் மாவட்டத்தில், இந்தியா-பாக்., எல்லை அருகே, கண்ணி வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

No comments:

Post a Comment