Friday, May 25, 2012

சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் 7500 படைவீரர்கள் தண்டிக்கப்பட்டனர்!

Friday, ,May, ,25, 2012
இலங்கை::சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலப் பகுதியில் சுமார் 7500 படைவீரர்கள் தண்டிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் எவருக்கும் மன்னிப்பு அளிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு பூரண சுதந்திரம் கோரும் நபர்கள், சரத் பொன்சேகா காலத்தில் படையினருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுதாப அடிப்படையிலேயே சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில அரசியல்வாதிகள் சரத் பொன்சேகாவை பயன்படுத்தி தங்களது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment