Friday, May 25, 2012

15 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மூன்று மாணவர்கள் கைது!:-கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

Friday, ,May, ,25, 2012
இலங்கை::மன்னார் சிலாபத்துறை பிரதேச பாடசாலையொன்றில் 15 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி கடந்த பெப்ரவரி மாதம் அவர் கல்வி கற்ற பாடசாலைக்குள் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களான மூன்று மாணவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் செல்ல முயன்ற நபர் கைது!

ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் பெங்களூர் நோக்கிச் செல்ல முயன்ற நபர் ஒருவரைக் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் வயிற்றுப்பகுதியில் தங்கக் கட்டிகளை வைத்துத் துணியால் மறைத்துவைத்துள்ளார். இவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன்பின்னரே இவரிடமிருந்து தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment