Friday, ,May, ,25, 2012இலங்கை::இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பதில் பேச்சாளர், அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுடனும் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சில குற்றச் சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்ட வழக்கு தொடரப்ட்டவர்களும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டியுள்ளவர்களும் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பாக சாட்சியங்களை சமர்ப்பித்து தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டுவருவதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தடுத்து வைக்கபட்டுள்ளவர்கள் தொடர்பான குற்றப்பத்திரிகைகளை நீதமன்றம் விசாரித்து அவர்களை நிரபராதிகள் என தெரிவித்து விடுதலை செய்தால் விடுவிப்பதில் சிக்கல் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் 359 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் 309 சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த இரண்டுப் பிரிவுகளில் கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எந்தப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, பெயர் அடிப்படையிலான தகவல்கள் தம்மிடம் இல்லாததால் அது தொடர்பாக கருத்து வெளியிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment