Saturday, May 19, 2012

மத்திய அமைச்சர்களின் பயணங்களுக்கு கட்டுப்பாடு, 5 நட்சத்திர ஓட்டல் விழாக்களுக்கு தடை?

Saturday, May, 19, 2012
புதுடெல்லி::நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை அதிரடியாகக் குறைப்பது, 5 நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் ஆடம்பர விழாக்களுகுத் தடை விதிப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சர்வதேச அளவிலான பொருளாதார நெருக்கடி மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து எத்தகைய சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப் போகிறது? என்ற விவாதம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் துறைகள் என்ற இரு பிரிவுகளாக சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உத்தேசித்துள்ளது.

குறிப்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பிருக்கிறது. கடந்த ஆண்டும்கூட இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆடம்பர விழாக்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு இதற்கான திட்டம் தயாரிக்கப்பட உள்ளது ,

இதேபோல் உள்நாட்டு உற்பத்தியில் மானியத்தொகையை 2 விழுக்காட்டுக்குக் கீழ் கொண்டு வரவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. எரிபொருள் மானியமாக வழங்கப்பட்ட ரூ.65 ஆயிரம் கோடி மானியத்தை நடப்பு நிதியாண்டில் ரூ.40 ஆயிரமாக குறைக்கப்படலாம்.

No comments:

Post a Comment