Monday, May, 21, 2012சென்னை::புலிகளின் ஆதரவு தலைவர்களைக் கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்தில், காங்கிரசார் உண்ணாவிரதம் மேற்கொள்ள, போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இதனால், உண்ணாவிரதப் போராட்டம், வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் படுகொலையின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, புலிகளின் ஆதரவாளர்கள், சென்னை, கோவை உள்ளிட்ட சில இடங்களில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினர். அப்போது, ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தியும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், சிலர் பேசினர்.இவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், "ராகுல் காந்தி மக்கள் சேவகர்கள்' சார்பில், இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள, போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.ராஜிவ் நினைவிடத்தில், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை, காங்கிரசார் இன்று நடத்துவதால், போலீசார் அனுமதி மறுத்தனர்.இந்நிலையில், சென்னை அண்ண சாலை மின்சார வாரிய அலுவலகம் பின் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொள்ள, காங்கிரசார் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு, போலீசார் சம்மதம் தெரிவித்துள்ளதால், வரும் 27ம் தேதிக்கு, உண்ணாவிரதப் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment