Monday, May, 21, 2012சென்னை::முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலைகார புலிகளின் தற்கொலை குண்டுதாரியினால் படுகொலை செய்ய ப்பட்ட 21வது ஆண்டு நிறைவு:-
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி புலிகளின்nதற்கொலை குண்டுதாரியினால் படுகொலை செய்ய ப்பட்ட 21வது ஆண்டு நிறைவு (21) இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
1991 ஆம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி அன்று எதிர்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி தமிழ் நாட்டின் ஸ்ரீபெரம்பூர் எனும் இடத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது தானு என்ற புலிகளின் இயக்க பெண் தற்கொலை குண்டுதாரி கொடுத்த பூ கொத்திலிருந்த குண்டு வெடித்ததில் ஸ்தலத்திலேயே மரணமானார். அவருடம் மேலும் 14 பேர் உயிரிழந்தனர்.
தானு என்ற இந்த புலிகளின் தற்கொலை குண்டுதாரியின் இயற்பெயர் தேன்மொழி ராஜரட்ணம் ஆகும். ராஜீவ் காந்தி 1984ல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பிரதமரானார். இறக்கும்போது இவருக்கு 46 வயதாகும்.
ராஜீவ் காந்தியின் மரணத்துடன் இந்தியாவின் நேரு குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்த குண்டு வெடிப்பின்போது கொல்லப்பட்ட புகைப்பட கலைஞரின் கமரா சேதமடையாத நிலையில் இருந்ததனால் தான் இந்திய புலனாய்வு அதிகாரிகள் அந்த கமராவிலுள்ள புகைப்படத்தை பார்த்து புலிகள் இயக்கமே ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது என்பதை ஊர்ஜிதம் செய்தது.
இன்று ராஜிவ் நினைவு தினம் அனுசரிப்பு!
புதுடில்லி::கொலைகார புலிகளின் தற்கொலை குண்டுதாரியினால் படுகொலை செய்ய ப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜிவின் 21வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் ராஜிவ் நினைவிடமான வீர் பூமியில் மரியாதை செலுத்த உள்ளனர். துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, டில்லி கவர்னர் தேஜேந்தர் கண்ணா, டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், பிரியங்கா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment