Tuesday, April, 24, 2012இலங்கை::ரவூப் ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளத் தயார் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கு ஹக்கீமை மத்தியஸ்தராக ஏற்றுக் கொள்ளுமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் அரசாங்கம் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment