Tuesday, April, 24, 2012சென்னை::ரிசாட்,1 என்ற ராடார் செயற்கைகோள் வரும் 26ம்தேதி அதிகாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக ராடார் செயற்கைகோள் ஒன்றை தயாரித்துள்ளது. அந்த செயற்கைகோளுக்கு ‘ரிசாட்,1என்று பெயரிடப்பட்டுள்ளது. 1,858 கிலோ எடை கொண்ட ரிசாட்,1 செயற்கைகோள், பிஎஸ்எல்வி,சி19 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வரும் 26ம் தேதி அதிகாலை 5.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான, 71 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 6.47 மணிக்கு தொடங்கியது. இந்த ரிசாட்,1 செயற்கைகோள் பூமியில் இருந்து 536 கிலோ மீட்டர் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோள் கடந்த 20ம் தேதியே விண்ணில் செலுத்தப்படும் என்று அறி விக்கப்பட்டிருந்தது. அதன்பின், செயற்கைகோளை விண்ணில் ஏவும் தேதியை இஸ்ரோ மாற்றியது குறிப்பிடத்தக்கது.
ரிசாட்,1 செயற்கைகோள் வேளாண்மை, நீர்வள நிர்வாகம் உள்பட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இரவு, பகல் என எந்த காலநிலையானாலும், மேக மூட்டமாக இருந்தாலும், பூமியின் நிலப்பரப்பை துல் லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது. செயற்கைகோளில் சி,பாண்ட் எஸ்.ஏ.ஆர்.பேலோடு எனப்படும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால், படங்கள் அனைத்தும் துல்லியமாகவும், தெளிவாகவும் இ ருக்கும். ரிசாட்,1 செயற்கைகோள் ரூ.378 கோடியிலும், செயற்கைகோளை விண்ணுக்கு எடுத்துச்செல்லும் பிஎஸ்எல்வி,சி19 ராக்கெட் ரூ.120 கோடியிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரிசாட்,1 செயற்கைகோள் ரூ.498 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ரிசார்ட் ,1 செயற்கை கோள் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி என்.வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment