Wednesday,April,18, 2012வாஷிங்டன்::அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1984,ல் உருவாக்கிய விண்கலம் ‘டிஸ்கவரி’. 18,ம் நூற்றாண்டை சேர்ந்த இங்கிலாந்து ஆராய்ச்சி கப்பலின் பெயரை நினைவுகூர்ந்து இப்பெயர் வைக்கப்பட்டது. 1984,ம் ஆண்டு ஆகஸ்ட் 30,ம் தேதி பயணம் தொடங்கிய டிஸ்கவரி 27 ஆண்டுகளில் 39 முறை வெற்றிகரமாக பறந்து, தனது கடைசி பயணத்தை கடந்த ஆண்டு மார்ச் 9,ம் தேதி நிறைவு செய்தது. மொத்தத்தில் 365 நாட்கள் (ஒரு ஆண்டு) விண்ணில் இருந்து சாதனை படைத்திருக்கிறது. இதையடுத்து, பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. வர்ஜீனியா மாநிலம் சான்டிலி நகரில் உள்ள தேசிய விண்வெளி அருங்காட்சியகத்துக்கு ‘நாசா 747’ விண்கலம்தாங்கி விமானம் மூலம் நேற்று எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக தலைநகர் வாஷிங்டன் பகுதியில் முக்கால் மணி நேரம் வட்டமடித்த டிஸ்கவரிக்கு மக்கள் பிரியாவிடை கொடுத்தனர்.
No comments:
Post a Comment