Wednesday, April 18, 2012

ஐ.நா., அகதிகள் ஐகமிஷன் தூதரானார் ஆஞ்சலினா ஜோலி!!

Wednesday,April,18, 2012
ஜெனிவா::ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஐகமிஷன் சிறப்பு தூதராக, பிரபல ஹாலிவுட் நடிகை ஆஞ்சிலினா ஜோலி,35, நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், இதற்கு முன், இதே அமைப்பின் நல்லெண்ணத் தூதராக பதவி வகித்தார். தற்போது, பதவி உயர்வு பெற்று, சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், அகதிகள் அமைப்பின் நல்லெண்ணத் தூதராக, பத்தாண்டுகளாக பதவி வகித்தபோது, உலகில், 40 இடங்களுக்குச் சென்று, அகதிகள் மறுவாழ்வுக்காக, அரும்பணியாற்றியுள்ளார். கடந்தாண்டு, ஆஸ்கர் விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், ஆப்கனில் அகதிகள் மறுவாழ்வுக்காக செயலாற்றினார். அவரது சிறப்பான பணிக்காக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.ஐ.நா., அகதிகள் அமைப்பு முதல் முறையாக, சிறப்பு தூதர் பதவியை உருவாக்கி உள்ளது. இதுபோன்ற பதவிகள், பொதுவாக, ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக்கோ அல்லது தூதரக பதவி வகித்தவர்களுக்கோ வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறு, அமைப்பின் செய்தி தொடர்பாளர் அட்ரின் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment