Wednesday,April,18, 2012ராமநாதபுரம்::இலங்கைக்கு கடத்துவதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, முள்ளிமுனை கடற்கரை ஓரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி, எஸ்.ஐ., கணேசமூர்த்தி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு, தொண்டி அருகே ரோந்து சென்றனர். முள்ளிமுனை கடற்கரையில் உள்ள சுடுகாடு அருகில் அவிக்கப்பட்ட நிலையில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 125 கிலோ, கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர். இவற்றை பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
மண்டபம்: மண்டபம் அருகில் உள்ள மரைக்காயர்பட்டிணம் ஊராட்சிப்பகுதியில் வாகனத்தில் கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. வன பாதுகாப்பு படை அதிகாரி பழனிக்குமார் தலைமையில் வனத்துறையினர், மரைக்காயர்பட்டிணத்தில் சோதனை மேற்கொண்டனர். கேன்களில் கடல்அட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து, கடத்துவதற்காக வைத்திருந்த பெரியபட்டிணம் சீனிசகுபர் அலி, 38, ஜபருல்லாகான், 52, ஆகியோரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment