Wednesday,April,18, 2012மும்பை::வலுவான லோக்ஆயுக்தாவை வலியுறுத்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 1 முதல் ஒரு மாதம் சுற்றுப் பயணம் செய்ய சமூக சேவகர் அன்னா ஹசாரே முடிவு செய்துள்ளார். வலுவான லோக்பால் வலியுறுத்தி டெல்லியில் அன்னா ஹசாரே இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தார். இதை தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தாமல் தள்ளிவைக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் மசோதாவில் ஒவ்வொரு மாநிலமும் லோக்ஆயுக்தா அமைப்பை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து லோக்ஆயுக்தா அமைக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் விட்டுவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திருத்தங்களுடன் கூடிய புதிய லோக்பால் மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதியில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
மத்திய அரசின் புதிய முடிவை தொடர்ந்து மகாராஷ்டிராவில் வலுவான லோக்ஆயுக்தா கொண்டுவர வலியுறுத்தி வரும் மே 1 முதல் மாநில அளவில் சுற்றுப் பயணம் செய்ய அன்னா முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் பிரிதிவிராஜ் சவானுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், Ôநீங்கள் முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஊழலை ஒழிக்க வலுவான சட்டங்கள் கொண்டுவருவீர், ஊழல் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் மாநிலத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. வலுவான சட்டங்களும் வரவில்லை. வலுவான லோக்ஆயுக்தா மசோதா உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும். இல்லை என்றால் அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களை போராட்டத்துக்கு தயார்படுத்தவும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறேன்Õ என கூற¤யுள்ளார். சுற்றுப்பயணம் குறித்து அன்னாவின் உதவியாளர் கூறுகையில், மே 1 முதல் ஷ¦ரடியிலிருந்து பயணம் தொடங்கும் என்றார்.
No comments:
Post a Comment