Wednesday, April 18, 2012

சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளன - இடர் முகாமைத்துவ நிலையம்!

Wednesday,April,18, 2012
இலங்கை::கடந்த 11ஆம் திகதி இந்தோனேஷியாவை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து இலங்கையில் பொருத்தப்பட்டிருந்த 10 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்ததாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஊடக விவகாரங்கள் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் சரத்லால் குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும், சுனாமி எச்சரிக்கைக்கென பொருத்தப்பட்டிருந்த 74 கோபுரங்களில் 64 கோபுரங்கள் உரிய முறையில் செயற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

செயலிழந்த 10 கோபுரங்களில் 5 கோபுரங்கள் ஏற்கனவே செயலிழந்திருந்ததாக தெரியவந்துள்ளதாகவும் ஏனைய ஐந்தும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடர் முகாமைத்துவ நிலையம் அண்மையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதால் அவற்றை மீளவும் புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அவற்றைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடக விவகாரங்கள் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் சரத்லால் குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment