Monday, April 16, 2012

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வேறு பெயர்களில் வசிக்கும் புலிகளை பற்றிய தகவல்களை அளிப்பதில்,வெளிநாடுகள் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றன-கோதபாய!

Monday, April 16, 2012
இலங்கை::இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வேறு பெயர்களில் வசிக்கும்,புலிகளை பற்றிய தகவல்களை அளிப்பதில், வெளிநாடுகள் ஒத்துழைப்பு அளிக்க மறுக்கின்றன'' என, இலங்கை பாதுகாப்பு செயலர் கோதபாய தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த, முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பிரேம்குமார் குணரத்தினம், சமீபத்தில் இலங்கைக்கு வேறு பெயரில் வந்து சென்றுள்ளார். இவர், இலங்கையில் கடத்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குணரத்தினம், அங்கு நோயல் முதலிகே என்ற பெயரில் தங்கியுள்ளார். இதை, கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய தூதர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இலங்கை அதிபரின் தம்பியும், ராணுவ செயலருமான கோத்தபையா குறிப்பிடுகையில், ""இலங்கையில் இருந்து தப்பிய புலிகள் பலர், வெளிநாடுகளில் வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை பற்றி தகவல் தெரிவிக்கும் விஷயத்தில், வெளிநாடுகள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் புலிகள் பலர் பெயரை மாற்றிக் கொண்டுள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment