Monday, April 16, 2012புதுடெல்லி::உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் ஆண்டு இறுதி கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) அமெரிக்காவில் நடக்கிறது. அதில் பங்கேற்க நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
இந்த கூட்டத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை போன்ற சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
உலக வங்கி கடன் உச்சவரம்பை பல ஐரோப்பிய நாடுகள் தாண்டியுள்ளன. இதனால் சர்வதேச நிதியத்தில் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்வது பற்றிய கலந்தாய்வு கூட்டத்திலும் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். அவருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் மற்றும் நிதித்துறை அமைச்சக அதிகாரிகளும் செல்கின்றனர்.
No comments:
Post a Comment