Monday, April 16, 2012இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லவிற்கு, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
கடத்தல் சம்பவமொன்று தொடர்பில் முறைப்பாடு செய்ய செல்லக் சென்ற தாய் ஒருவர் பற்றி கிரியல்ல கருத்து வெளியிட்டிருந்தார்.
கடத்தல் குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது கடத்தல்காரர்கள் அங்கு இருந்ததனை குறித்த தாய் கண்டு அதிர்ச்சியடைந்தார் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிரேஸ்ட அரசியல்வாதியொருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நியாயமற்றது என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உண்மையில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது பற்றிய தகவல்களை வழங்குமாறு அவர் கிரியல்லவிடம் கோரியுள்ளார்.
தகவல்கள் வழங்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
லக்ஸ்மன் கிரியல்ல ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் தாளத்திற்கு ஏற்ப ஆட்டம் போடுகின்றார் என கோதபாய குற்றம் சுமத்தியுள்ளார்.
1987-1988ம் ஆண்டுகளில் இலங்கையில் மிக மோசமான அளவில் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணியான லக்ஸ்மன் கிரியல்ல, பிரேம்குமார் குணரட்னம் விவகாரத்தில் அடிப்படை சட்ட அறிவு கூட இன்றி கருத்து வெளியிட்டுள்ளமை வருத்தமளிப்பதாக கோதபாய தெரிவித்துள்ளார்.
உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ளாமலேயே லக்ஸ்மன் கிரியல்ல கருத்து வெளியிடுள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment