Thursday, April, 26, 2012இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதி முல்லையடி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வெடி விபத்தில் இரண்டு பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளனர். நான்கே வயதான முகுந்தன் தமிழ்மாறன் மற்றும் அவரது சகோதரனான இரண்டு வயதுடைய முகுந்தன் தனூஜன் ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.பெற்றோருக்கு இவர்கள் இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழமை போன்று கூலித்தொழிலாளியான தந்தை தமது வேலைகளில் ஈடுபட்டிருக்கையின் தாயார் சமையலறையினில இருந்துள்ளார். குழந்தைகள் தமது பாட்டினில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அவ்வேளையில் வீட்டின் அருகாக இருந்து கைவிடப்பட்ட பொருளொன்றை இச்சிறுவர்கள் எடுத்து விளையாடிக்கொண்டிருந்த வேளையில் அது வெடித்து சிதறியுள்ளது.இதனால் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றைய சிறுவன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளான். இவர்கள் இருவரதும் சடலங்கள் நேற்று இரவு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment