Thursday, April, 26, 2012இலங்கை::இந்திய பாராளுமன்றக் குழுவினர் இலங்கையின் வட பகுதிக்குச் செல்லும் போது அங்கு மெனிக்பாம் முகாமில் மூன்று இலட்சம் அகதிகளை அரசாங்கம் அடைத்து வைத்திருப்பதாக நினைத்திருப்பார்கள் என பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவர்கள் நேரில் சென்று நிலைமையைப் பார்த்த பின்னரும் எஞ்சியிருந்த சிலரைப் பார்த்து அவ்வாறே நினைத்திருப்பர். எனினும், அகதிகள் தொடர்பில் அவர்கள் கொண்டிருந்த தவறான எண்ணத்தை மெனிக் பாமுக்குள் நுழைந்த போது மாற்றிக் கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புச் செயலாளர் இது தொடர்பில் மேலும் தெரிவிக் கையில், நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் நாடெங் கிலும் ஐக்கியமாக வாழ்கின்றனர்.
குறிப்பாக தமிழ் மக்கள் கொழும்பு உட்பட நாட்டின் சகல இடங்களி லும் தமது அன்றாட நடவடிக்கைகளை சிரமமின்றி மேற்கொள் கின்றனர். இந்திய பாராளுமன்றக்குழு எதிர்பார்த்தது போன்ற நிலை இலங்கையில் இல்லை.
அவர்கள் வடக்கிற்குச் சென்ற போது இதனை உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்தியப் பாராளுமன்றக் குழுவினர் மெனிக் பாமுக்குச் சென்ற போது அங்குள்ள மக்கள் தாம் தற்போது சுதந்திரமாக உள்ளதாகவும் மரண அச்சுறுத்தல் எதுவுமில்லை எனவும், அடிப்படை வசதிகள் உள்ளதெனவும் தெரிவித்துள்ளனர்.
தமக்கான அரிசி, பருப்பு போன் றவை முறையாகக் கிடைப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். கொழும்பிற்குச் செல்வதற் கான சுதந்திரம் உங்களுக்கு உள்ளதா? என அக்குழுவினர் கேட்ட போது, அதற் கான சுதந்திரம் எமக்குள்ளது, எனினும் கையில் பணம்தான் இல்லை என பதிலளித்துள்ளனர் என்றார்.
நாட்டில் இராணுவம் இருப்பது நாட்டிற்குள்ளும் வெளியிலிருந்தும் வரும் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காகத்தான். அதற்கிணங்க எமது இராணுவத்தினர் நாட்டில் வைத்திருக்க வேண்டிய இடங்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். அப்பிரதேசங்களில் அவர்களை வைத்திருப்பதானது நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்புக்காகவே எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment