Thursday, April, 26, 2012புதுடெல்லி::இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தனி ஈழமே தீர்வாக முடியும். தனி ஈழம் அமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தி, அதன் பேரில் முடிவெடுக்க இந்தியாவும், சர்வதேச சமூகமும் முயற்சி எடுக்க வேண்டும்' என, பார்லிமென்டில் தி.மு.க., குரல் கொடுத்தது. "அவ்வாறு முயற்சி எடுக்கவில்லை எனில், மத்திய அரசிலிருந்து வெளியேறுவீர்களா' என்று அ.தி.மு.க., கேட்டதற்கு, பதில் ஏதும் கூறாமல் தி.மு.க., அமைதியாகி விட்டது.
லோக்சபாவில் நேற்று பூஜ்ஜிய நேரத்தின் போது, தி.மு.க., எம்.பி., யான டி.ஆர். பாலு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில், இலங்கைக்கு சமீபத்தில் எம்.பி.,க்கள் குழு சென்று வந்துள்ளது. அந்தக் குழு வந்தவுடன் மத்திய அரசிடம் அறிக்கை அளித்ததா, இல்லையா என்பது பற்றி தெரியவில்லை. எம்.பி.,க் கள் குழு நேரில் என்ன கண்டு வந்தது என்பது பற்றி யாருக்கும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இருப்பினும், குழுவில் சென்றிருந்த சில எம்.பி.,க்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளன. போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் கூட, அங்கு இன்னும் நிலைமை மாறவே இல்லை.
அனாதைகள்: மாணிக்பார்ம் போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தங்குவதற்கு இடம் இல்லாமல் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அங்கு, பல குழந்தைகள் அனாதைகளாக உள்ளனர். அவர்களுக்கு போதிய கல்வி வசதி செய்து தரவில்லை. சிங்கள ராணுவத்தினர் எந்நேரமும், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில், மசூதி, சர்ச் என, எல்லாவற்றிலும் ராணுவத்தினர் உள்ளனர். மக்களை துன்புறுத்தியும் வருகின்றனர். இடம் பெயர்ந்த மக்கள் பலரும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.
ஓட்டெடுப்பு: இலங்கையில், கடந்த 30 ஆண்டுகளாக இனப்பிரச்னை தீவிரமாக உள்ளது. இன்னும் தமிழ் மக்கள் மீது வன்முறை தொடர்கிறது. 1987ம் ஆண்டு போடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் மதிக்கவில்லை. அதன் பேரில், எந்த முடிவும் எடுக்கப்படவும் இல்லை. 13வது சட்டத் திருத்தத்தையும் பல ஆண்டுகளாக நிறைவேற்ற, இலங்கை அரசு மறுக்கிறது. எனவே, தமிழர்கள் பகுதியில் ஒரு ஓட்டெடுப்பை நடத்த வேண்டும். உலகின் பல்வேறு இடங்களில் தனிநாடுகள் உருவாகி வருகின்றன. சமீபத்தில் கூட கொசாவோ, கிழக்கு தைமூர் மற்றும் தெற்கு சூடான் போன்றவை தனி நாடுகளாக உருவெடுத்துள்ளன.
தனி ஈழம்: இலங்கையில் தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு, தனி ஈழமாகவே இருக்க முடியும். இதற்கு மத்திய அரசும், சர்வதே சமூகமும் முன் முயற்சிகள் எடுக்க வேண்டும். இதுதவிர, தமிழர்கள் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண, இந்தியா குரல் கொடுக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவிட வேண்டுமெனில், அதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகள் தான் முக்கியமானதாக இருக்கும். அதற்கு ஒரே வழி, தனி ஈழம். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பதிலில்லை: அவர் பேசியதும், அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பிதுரை எழுந்து, "தனி ஈழம் அமைக்க இந்தியா முன்முயற்சிகள் எடுக்கவில்லை எனில், மத்திய அரசில் இருந்து தி.மு.க., வெளியேறுமா?' என்று கேட்டார். அதற்கு டி.ஆர்.பாலு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்து விட்டார்...
தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன்: (புலி ஆதரவு கோமாளி) கருணாநிதி பேச்சு!
சென்னை: தனி தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். சட்டசபையில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் வகையில் வடசென்னை தி.மு.க., சார்பில் பெரவள்ளூரில் பொதுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: சட்டசபையில் எதிர்கட்சிகளை அடக்கும் நடவடிக்கையை போலவே தி.மு.க.,வை அடக்கி விட முடியும், அதன் குரல் வளையை நெருக்கி விட முடியும் என்று எண்ணியவர்களுக்கு இந்த கூட்டத்தின் மூலமும், இனியும் மாவட்டந்தோறும் நடக்கும் பல கூட்டங்களின் மூலமும் தி.மு.க.,வினர் பதில் அளிப்பர். அ.தி.மு.க.,வுடன் நான் சண்டைக்கு போக விரும்பவில்லை. அதே நேரத்தில் வந்த சண்டையையும் விட விரும்பவில்லை. இன்று, ஜனநாயகமே இல்லாத சட்டசபை தான் உள்ளது. எதிர்க்கட்சிகளை மதிக்காத, அவைகள் இருப்பதையே விரும்பாத, ஆட்சி தான் இன்று நடக்கிறது. நான் 50 ஆண்டுகளாக சட்டசபையில் பணியாற்றியவன் என்னை பயமுறுத்தி பார்க்காதீர்கள். நான் பயந்து சாக வேண்டியவனும் அல்ல. நான் முதல்வராக இருந்த போது என்னை புகழ வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன். தற்போது சட்டசபையில் புகழாரம் மட்டுமே முக்கிய பணியாக நடக்கிறது. தமிழக ராஜ்ஜியத்தை மக்கள் ஜெயலலிதாவிற்கு எழுதி கொடுத்து விட்டனர். ஆட்சி மாறலாம், காட்சியும் மாறலாம் அதற்காக, நாங்கள் பதிலுக்கு பதில் எதையும் செய்ய மாட்டோம். பழி வாங்கவும் மாட்டோம். மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வோம். நாங்கள் பகையை கூட பண்பால் வெல்பவர்கள். அன்பு சகோதரி என்று சொல்லவும் மாட்டோம். அடுத்தநாள் வெளியே அனுப்பவும் மாட்டோம். மீண்டும் சேர்த்து கொள்ளவும் மாட்டோம். எங்கள் தமிழ் உணர்வு பட்டுபோகாத வகையில் எங்களை யாரும் வீழ்த்த முடியாது. சட்டசபையில் எதிர்கட்சிகளாகிய எங்களுக்கு ஏற்பட்ட நிலையை விளக்க தான் இந்த மக்கள் மன்றத்திற்கு வந்தோம்.
பதவியும், பட்டமும், கிரீடமும் உங்கள் கால் செருப்புக்கு ஈடாகுமா? நாளைக்கும் சிறைச்சாலை சென்றால் கூட அதை தவ சாலையாக ஏற்றுக்கொள்வோம். 90 வயதை நெருங்கி விட்டேன் அதன் பிறகு வாழ வேண்டியது உருவமாக அல்ல. பெரியார், அண்ணா போன்று உங்கள் மனதில் வாழ்வேன். தி.மு.க.,விற்கு சக்தி, மன திடம் உள்ளது. தமிழர்களை ஒன்றுபடுத்த தான் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன். நான் தமிழுக்காக குரல் கொடுத்து கொண்டே இருப்பேன். தனி தமிழ் ஈழத்தை உருவாக்கி விட்டு தான் இவ்வுலகை விட்டு செல்வேன். அதற்காக அண்ணா, காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழ் ஈழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைக்க டெசோ இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அவ்வியக்கம், தி.மு.க.,வின் துணை இயக்கமாக செயலாற்றி தனி தமிழ் ஈழம் உருவாக பாடுபடும். இவ்வாறு கருணாநிதி பேசினார். இக்கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment