Wednesday,April,25,2012செங்கல்பட்டு::செங்கல்பட்டு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 17பேர் 10வது நாளாக புதன் கிழமை தொடர் உண்ணாவிரதப்போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 16.4.2012 திங்கள்கிழமை அன்று 10பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6ம் நாள் மேலும் ஒருவரும், ஏழாம் நாள் மேலும் இருவரும், 10ம் நாள் மேலும் 2 பேர் என மொத்தம் 17 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சேகர், சதர்சன், நாகராசா ஆகிய 3பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் அவர்கள் செங்கல்பட்டு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
இருந்த போதும் தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment