Saturday, April 28, 2012

மேற்குலக நாடுகளில் தொழில்வாய்ப்புகள்!

Saturday, April, 28, 2012
இலங்கை::கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிஸ்சர்லாந்து மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளுக்கு இலங்கைப் பணியாளர்களை அனுப்புவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதுகுறித்த ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணியாளர்களை அனுப்புவதற்காக சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார தெரிவித்துள்ளார்..

தற்போது, 20 க்கும் அதிகமான நாடுகளில் இலங்கை பணியாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், அது போதுமானதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, மற்றும் சுவிஸ்சர்லாந்து போன்ற நாடுகளில் தொழில்வாய்ப்புகளை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் பொறியியளாலர், விருந்தக தொழில்கள் மற்றும் விமான நிலைய பணிகளில் அதிக வெற்றிடங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கைப் பணியாளர்களை சர்வதேச நாடுகளில் தொழில்புரிவதற்கு ஏற்ற வகையில் பயிற்றிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment