Saturday, April, 28, 2012இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 8 மணியளவில் பலாலி வானூர்தி தளத்திற்கு செல்லவுள்ளார்.
அதன்பின்னர், அவர் 10 மணியளவில் பூநகரி முனீஸ்வரன் ஆலயத்தில் இடம்பெறும் விசேட சமய வழிபாடுகளில் கலந்து கொண்டு, பிரதேசங்களில் உள்ள பின்தங்கிய கிராமிய மக்களை சந்திக்கவுள்ளார்.
இதனிடையே, பின்னர் 2 மணியளவில் கிளிநொச்சி நகர பகுதிக்கு விஜயம் செய்யும் எதிர்கட்சித் தலைவர் ரணில்விக்கிரம சிங்க உள்ளிட்ட குழுவினர் நகர மக்கள் மற்றும் வர்த்தகர்களையும் சந்திக்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய சமய வழிபாடுகளிலும் ஐக்கிய தேசிய கட்சி குழுவினர் கலந்துகொள்ளவுள்னர்.
அதனையடுத்து பிரதேச மக்களுடனான சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வுகளை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் மற்றும் காரைநகர் பிரதேசசபை உறுப்பினர் கணேஷபிள்ளை பாலசந்திரன் ஒருங்கிணைக்கின்றனர்.
No comments:
Post a Comment