Saturday, April, 28, 2012இலங்கை::பணிப்பெண்களாக தொழில் பெற்று ஜோர்தான் சென்றுள்ள இலங்கைப் பெண்கள் 29 பேர் அம்மான் நகரில் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருப்பதாக பதிவாகியுள்ளது.
சிலர் பொலிஸ் நிலையமொன்றிலும் இன்னும் சிலர் கட்டடம் ஒன்றிலும் தற்போது தங்கியிருப்பதாக ஜோர்தானிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்கள் குறிப்பிட்டனர்.
உணவு, மென்பானங்களின்றி பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்தனர்.
இந்த விடயம் குறித்து ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதுவர் காமினி ராஜபக்ஸவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது இந்த பெண்கள் தொடர்பாக தமக்கு இதுவரை பதிவாகவில்லை எனக் கூறினார்.
எனினும் அவர்கள் குறித்து உடனடியாக ஆராய்ந்து பார்ப்பதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment