Saturday, April, 28, 2012சென்னை::(புலி ஆதரவு கோமாளி) கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் 30-ந் தேதி நடைபெறுகிறது!
தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் (புலி ஆதரவு) ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக் கப்பட்டுள்ளது. இதன் முதல் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் 30-ந் தேதி நடைபெறுகிறது.
இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு (புலி ஆதரவு) அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலை மையில் (புலி ஆதரவு) தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பில் உறுப்பினர்களாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ் ஈழம் (புலி ஆதரவு) ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் அமைப்பின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்’’ என்று கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment