
Monday, April, 23, 2012சோல்::தென் கொரிய ஜனாதிபதி லீ மயும் பக்கின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு அந்நாட்டின் சோல் நகர விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தென் கொரியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி உட்பட இலங்கைக் குழுவினரை வரவேற்பதை படங்களில் காணலாம்...
தென்கொரிய ஜனாதிபதி லீ மையுங் பகின் அழைப்பில் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் அங்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் 80 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் தென்கொரியாவுக்குப் பயணமாகியுள்ளது.
தென்கொரிய ஜனாதிபதி லீ மயுங் பக்கை சந்திக்கவிருப்பதுடன், அங்குள்ள பல்வேறு அரச பிரதானிகளையும் சந்திப்பதுடன், பல்வேறு உடன்படிக்கைகளிலும் கைசாத்திடவுள்ளார்.
No comments:
Post a Comment