Wednesday, April 25, 2012

அம்பாறை - மஹாஓயா பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு படை பிரிவு சிப்பாய் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை!

Wednesday,April,25,2012
இலங்கை::அம்பாறை - மஹாஓயா பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு படை பிரிவு சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னை தனே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று 25ம் திகதி அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அம்பாறை - மஹாஓயா பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பாறை பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமலால் ரணகல தலைமையில் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தெஹியத்தகண்டி நீதவான் மரண விசாரணைகளை நடத்தவுள்ளார்.

No comments:

Post a Comment