Wednesday,April,25,2012இலங்கை::யுத்தத்தை திட்டமிட்டவாறு முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
படையினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்துமாறு சர்வதேச ரீதியில் பாரியளவில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், திட்டமிட்டவாறு முன்நகர்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட ரீதியில் உத்தரவு பிறப்பித்தார் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அழுத்தங்கள் காரணமாக திடீரென மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த ஜனாதிபதி ஒருபோதும் இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனிப்பட்ட ரீதியில் தமக்கு உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த வெற்றிக்கு நாட்டின் அரசியல் தலைமைத்துவம் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட காலப்பகுதியிலும் ஜனாதிபதி தமது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment