Wednesday,April,25,2012இலங்கை::புலிகளுக்கு ஆதரவளித்த துணைப் பொலிஸ் அத்தியட்சகரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கம்பஹபா மாவட்ட முன்னாள் துணைப் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் குரே தற்போது பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நீதவான் சுனில் ராஜபக்ஷ, சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
புலிகளின் முக்கிய உறுப்பினரான ரமேஸ் என்பவர் பற்றிய தகவல்களை மூடி மறைத்ததாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment