Monday, April, 23, 2012இலங்கை::இலங்கை மற்றும் மதுரைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுமதி அளித்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சி எம்பி மணிக்கா டகொரே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கை வந்த நான்கு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் மணிக்கா டகொரேவும் ஒருவராவார்.
இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் இரு நாட்டு கலாசார உறவுகளை மேம்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் இதன்போது மதுரை - இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி இணங்கியதாகவும் மணிக்கா டகொரே குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment