Monday, April, 23, 2012இலங்கை::எல்பிட்டிய - ஊரகஹ பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் 17 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீதியிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த வீதியில் சந்தேகத்திற்கு இடமான நபரொருவர் நடமாடுவதாக கிடைத்த தகலை அடுத்து குறித்த இளைஞன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே வந்த வேளையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment