Monday, April 23, 2012இலங்கை::ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அதிகாலை தென் கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தென் கொரிய ஜனாதிபதி லீ மயுங் பக்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதன்போது இருதரப்பு உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூசான் வணிக மற்றும் கைத்தொழில் சபையின் அனுசரணையுடன் நடைபெறும் இலங்கை - கொரிய வர்த்தக சங்கக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உரை நிகழ்த்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment